அது ஒரு மிகவும் புகழ் பெற்ற கல்லூரி திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு மாணவனும் அந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று விரும்புவான். அதுமட்டுமல்ல, அங்கு படித்த ஒவ்வொரு மாணவனும் நல்ல திறமைசாலி என பிறரால் மதிக்கப்படுவான். ஏனெனில் உலகிலேயே திறமைவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது
அந்த புகழ்பெற்ற சிறந்த கல்லூரியில் தத்துவம், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகள் இருந்தன.
மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். அது தத்துவ வகுப்பு நேரம்.அன்றைய வகுப்பில், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என விவாதிக்கப்பட்டது. இந்த விவாதம் மிகவும் ஆர்வமாக இருந்தது. ஏனென்றால், இன்றைக்கான விவாதமே "கடவுள்" தானே. பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் முடிவில்லாத கேள்வி. விவாதம் மிகவும் காரசாரமாக இருந்தது.
தத்துவ பேராசிரியர் தன்னுடைய கருத்துகளை ஒரு தர்க்கமாக, கேள்வியாக முன்வைத்தார்.
1.இந்த வகுப்பறையில் இருக்கிற யாராவது ஒருவர் எப்பொழுதாவது கடவுள் பேசியதை கேட்டு இருக்கிறீர்களா?
ஒரே அமைதி யாரும் பேசவே இல்லை.
2.இந்த வகுப்பறையில் உள்ள யாராவது எப்பொழுதாவது கடவுளைத்
தொட்டு பார்த்திருக்கிறீர்களா?
மீண்டும், மாபெரும் அமைதி.யாரும் வாயைத் திறக்கக் கூட
முயற்சிக்கவில்லை.
3.இந்த வகுப்பறையில் உள்ள யாராவது எப்பொழுதாவது கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா?
உலகமகா அமைதி எந்த மாணவனும் துணிந்து எந்த பதிலையும் கூறவில்லை.
பேராசிரியர் சொன்னார்: நல்லது, அது தான் உண்மையும் கூட. உங்கள் அமைதி என்ன சொல்கிறதென்றால், நீங்கள் யாரும் கடவுள் பேசியதை கேட்கவில்லை, கடவுளை தொட்டு பார்த்ததில்லை ,கடவுளை பார்த்ததில்லை. ஏனென்றால், "கடவுள் இல்லை! இல்லவே இல்லை!".
ஒரு மாணவன் சில நொடிகள் யோசித்தான் பிறகு தனது பேராசிரியரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க அனுமதி கேட்டான். பேராசிரியர் மிகுந்த ஆர்வத்துடன், அந்த துணிச்சலான மாணவனின் பதிலை கேட்க அனுமதி அளித்தார்.
அந்த மாணவன் எழுந்து நின்று தன்னுடைய சக மாணவர்களைப் பார்த்து சில கேள்விகளை எழுப்பினான்.
1.இந்த வகுப்பில் உள்ள யாராவது ஒருவர் எப்பொழுதாவது நமது பேராசிரியரின் மூளை பேசியதை கேட்டு இருக்கிறீர்களா?
ஒரே அமைதி.
2.இந்த வகுப்பில் உள்ள யாராவது ஒருவர் எப்பொழுதாவது நமது பேராசிரியரின் மூளையை தொட்டுப் பார்த்து இருக்கிறீர்களா?
மாபெரும் அமைதி. கொஞ்சம் நஞ்சமிருந்த கூச்சல்களும் மொத்தமாக அடங்கிவிட்டது.
3.இந்த வகுப்பில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் எப்பொழுதாவது, நமது பேராசிரியரின் மூளையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?
வகுப்பறையில் ஒரே அமைதி யாரும் எதுவும் பேசவில்லை.
அந்த துணிச்சலான மாணவன் தன்னுடைய பேச்சை தொடர்ந்தான். ஆம், அதுதான் உண்மை.பேராசிரியரின் தத்துவப்படி கடவுள் பேசியதை இங்குள்ளவர்கள் யாரும் கேட்கவில்லை ,கடவுளைத் தொட்டு பார்த்ததில்லை மற்றும் கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஆகையால், கடவுள் இல்லை.
அப்படியென்றால், யாரும் நமது பேராசிரியரின் மூளை பேசியதை இதுவரை கேட்டதில்லை, அவரின் மூளையை யாரும் இதுவரை பார்த்ததில்லைமற்றும் அவரின் மூளையை இதுவரை யாரும் நேரில் பார்த்ததில்லை. அப்படியானால், "நமது பேராசிரியருக்கு மூளை இல்லை! இல்லவே இல்லை!".
பேராசிரியர்,தனது தவறை உணர்ந்தார்.அந்த துணிச்சலான மாணவனின் சிறந்த பதிலுக்காக A கிரேடு ( தரம்) அளித்தார்.
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். (சங்கீதம்14:1)
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபிரெயர் 11:1)
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்